மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் ( fracture ) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைகோவின் மகனும் மதிமுக முதன்மைச் செயலாளருமான துறைவைக்கோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துறைவைக்கோ வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் அவர்களின் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்கள் நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள்.
Also Read : அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் – அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்..!!
எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.
சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல் நலம் ( fracture ) பெறுவார்கள்;
வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என துறைவைக்கோ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.