இன்று பிரதமரை விமர்சிப்பவர்களுக்கு தேர்தல் முடிவின் போது தக்க பதிலடி (vanathi srinivasan) கிடைக்கும் மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என தமிழக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது :
வரும் மார்ச் 19 ம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார் .பாஜகவில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு இன்னும் 2-3 நாட்களில் அறிவிக்கப்படும்
பாகிஸ்தானில் இருந்தெல்லாம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறப்படத்தாக வதந்திகள் பரவி வருகிறது; இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும்.
பாஜக அரசை அதானி, அம்பானி நடத்தி வருவதாக கூறி வந்த நிலையில், தேர்தல் பத்திரத்தில் அந்த நிறுவனங்களின் பெயர் இல்லாதது எதிர்கட்சிகளுக்கு ஏமாற்றம் அளித்திருக்கும்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நாங்கள் பட்டியல் கொடுக்க தயார் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார், தமிழ்நாட்டில் 3 ஆண்டு கால ஆட்சியில் எவ்வளவு வாங்கி இருக்கிறீர்கள் என சொல்ல முடியுமா
“நாளை கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகன பேரணி தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறது;
காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கொடுத்த நிதியை விட பிரதமர் மோடி அளித்த நிதியே அதிகம்”
“பிரதமர் நரேந்திர மோடி பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார் . பிரதமரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 28 பைசா என விமர்சனம் செய்வதா?;
இன்று பிரதமரை விமர்சிப்பவர்களுக்கு தேர்தல் முடிவின் போது தக்க பதிலடி (vanathi srinivasan) கிடைக்கும் மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என தமிழக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.