வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் என அவர் கூறிய விஷயம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக தமிழ் சினிமாவிற்குள் அவர் சொன்ன தகவல் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் தற்போது இதற்கு மன்னிப்பு கேட்ட தில்ராஜ் அவர்கள் மற்றொரு மேடையில் பேசும்போது தான் என்ன பேசினாலும் அது சர்ச்சை ஆவதாகவும் 20 நிமிடம் எடுத்த வீடியோவில் 20 செகண்ட் எடுத்து தன்னை சர்ச்சை ஆகிவிட்டார்கள் என்று தற்போது தில் ராஜூ புலம்பி வருகிறார்.
தெலுங்கு மீடியா ஒன்றுக்கு வாரிசு திரைப்படம் குறித்து பேட்டியளித்த தில் ராஜு அவர்கள் விஜய் திரைப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் வழங்க வேண்டும் சரிசமமாக தியேட்டர்கள் வழங்க கூடாது.ஏனெனில் தமிழ் சினிமாவில் விஜய் தான் நம்பர் ஒன் என்று அடுத்தடுத்து விஜய்க்கு ஆதரவாக அவர் பேசிய விஷயங்கள் தற்போது அஜித் ரசிகர்களால் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களாலே கேள்வி உள்ளாகியுள்ளது.இதனை தொடர்ந்து தற்போது இந்த ஒரு பதிவிற்கு பதில் அளித்து மற்றொரு மேடையில் தில் ராஜு பேசியுள்ளார்.
நான் ஒரு அரை மணி நேரம் அந்த மீடியாவுக்கு பேட்டி அளித்தேன். அதில் நான் பேசிய வெறும் 20 நொடி பேச்சை மட்டும் கட் செய்து சோஷியல் மீடியாவில் இப்படியொரு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளனர். நான் மற்ற எந்தவொரு முன்னணி நடிகரையும் தாழ்த்தி பேச வேண்டும் என்கிற அர்த்தத்தில் பேசவில்லை என அதிரடியாக விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.