நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 11-ம் தேதி வெளியாகியுள்ளது. மேலும் அதே தேதியில் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் வெளியாக உள்ளது.8 வருடங்களுக்கு பிறகு விஜய்,அஜித் இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவதால் இந்த திரைப்படங்களை எதிர்பார்த்து சினிமா ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த இரண்டு திரைப்படத்தையும் ரசிகர்களுக்கு முன்பாகவே கண்டு களித்த சென்சார் போர்ட் இந்த இரண்டு திரைப்படங்கள் பற்றி விமர்சனத்தை தற்போது கூறியுள்ளது. வாரிசு திரைப்படத்தை கண்டு களித்த சென்சார் பட குழு இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.
மேலும் வாரிசு படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக நிறைந்துள்ளதாகவும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியின் முடிவில் கண்ணீருடன் தான் தியேட்டரை விட்டு வெளியேறுவார்கள் என சென்சார் குழு கூறியுள்ளது.ஆகையால் வாரிசு படம் மக்களுக்கு பிடித்தால் பிளாக்பஸ்டர் ஹிட் ஒருவேளை மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதல பாதாளத்திற்கு கூட செல்லலாம் என்று கூறியுள்ளது.இதற்கு காரணம் செண்டிமெண்ட் படத்தில் அதிகமாக இருப்பதால் குடும்பங்கள் மட்டுமே பார்க்கும் படமாக இந்த படம் அமையும் என்றும் இது கத்தி மேல் நிற்பது போல தான் உள்ளது என்று சென்சார் குழு கூறியுள்ளது.
மேலும் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தையும் பார்த்த சென்சார் குழு துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக கூறியுள்ளது. மேலும் துணிவு படத்தின் செகண்ட் ஹாபில் ஆக்சன் அதிகமாக உள்ளதாகவும் ஃபர்ஸ்ட் ஹாபில் அதைவிட குறைவாக ஆக்ஷன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் இந்த துணிவு திரைப்படம் அதிக இளைஞர்களை கவரும் விதமாக இருப்பதாக சென்சார் குழு தற்போது கூறியுள்ளது.மேலும் சென்சார் குழுவின் இந்த விமர்சனத்தின் படி வாரிசு திரைப்படம் ரசிகர்களிடம் வெற்றி பெறுமா என்ற கேள்வி தற்போது பொதுமக்களிடையே எழுந்துள்ளது.