நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது தங்கையை , சக வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த குற்றச்சம்பவத்தை கண்டித்து ஆக. 21-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தொல். திருமாவளவன் கூறிருப்பதாவது :
நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரை – சந்திராசெல்வி ஆகியோரின் மீது நடத்தப்பட்ட சாதிய கொலைவெறி தாக்குதலை கண்டித்து ஆகத்து 21ஆம் தேதி திங்கட்கிழமை அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் 20ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் 21 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது . எனவே தோழர்கள், சனநாயக சக்திகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்கவும்! என தனது ட்விட்டர் பதிவில் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார் .