கொரோனா என்னும் பெருந்தொற்று ஏற்பட்ட நேரத்தில் புன்னகை மூலம் இணைய உலகை ஈர்த்த வேலம்மாள் பாட்டி தனது 92 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார் .
கன்னியாகுமரி மாவட்டம் கீழகலுங்கடி பகுதியைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி கொரோனா ஊரடங்கின் போது அரசு வழங்கிய நிவாரண தொகையை பெற்றார் .அப்போது எடுக்கப்பட்ட வேலம்மாள் பாட்டியின் புன்னகை புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாக பரவியதை அடுத்து , அரசு விளம்பரங்களில் தொடர்ந்து இடம் பிடித்து வந்தார்.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட வேலம்மாள் பாட்டி தனது 92 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார் . இதையடுத்து தனது புன்னகை மூலம் இணைய உலகை ஈர்த்த வேலம்மாள் பாட்டியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரைபிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .