சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியின் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றி மாறன் (Best Friend) வெற்றி துரை சாமி குறித்து உருக்கமாக பேசியுள்ளார் .
சென்னை முன்னாள் மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி. திருப்பூரை சேர்ந்த தனது உதவியாளர் கோபிநாத்துடன் இமாச்சல் பிரதேசத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றுள்ளார்.
கின்னார் மாவட்டம் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்தில் சிக்கியது .
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தன்ஜின் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வெற்றியின் நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஆனால் வெற்றி துரைசாமி மாயமானார்
இதையடுத்து இந்த விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை 8 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது .
விபத்து நடந்த இடத்திலிருந்து 6 கி மீ தொலைவில் உள்ள சட்லஜ் ஆற்றில் உடல் கிடைத்துள்ளது.
இதையடுத்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட அவரது உடலை பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் சசிகலா சீமான் எடப்பாடி பழனிச்சாமி அன்புமணி ராமதாஸ் நடிகர் அஜித் விஜய் விஜயபிரபாகரன் என ஏராளமான நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர்.
வெற்றி துரைசாமியின் மறைவு செய்தியை அறிந்த அனைவரும் தங்களது வேலைகளை விட்டு விட்டு வெற்றியின் இறுதி பயணத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தந்திருந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் குடுமபத்தினரின் கண்ணீர் அஞ்சலியுடன் வெற்றி துரைசாமியின் உடல்
சென்னை தி நகரில் உள்ள கண்ணம்மா பேட்டை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது .
இந்நிலையில் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த் வெற்றியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ரஜினியை போல் நடிகர் விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட நடிகர்களும் வெற்றியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் நேற்று வெற்றியின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் வெற்றி நண்பர்கள்
திரை பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டு வெற்றி குறித்து உருக்கமாக பேசியுள்ளனர்.
அந்தவகையில் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் வெற்றி குறித்து கூறியதாவது :
வெற்றி எனக்கு உதவி இயக்குனராக இருந்தார் என்று சொல்வதை விட (Best Friend) அவர் எனது சிறந்த நண்பர் என்று தான் சொல்ல வேண்டும் .
Also Read : https://itamiltv.com/eps-order-for-conduct-public-meetings/
வெற்றிக்கும் எனக்கும் நிறைய விஷயங்களில் ஒத்துப்போகும் நானும் அவரும் விலங்குகள் பிரியர்கள் அவர் ஒரு சிறந்த WildLife போட்டோக்ராபர் .
நம்மை விட்டு இத்தனை விரைவில் ஏன் சென்றார் என்று தான் தெரியவில்லை என வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.