ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுண்டர் குறித்த வசனங்களை சுட்டிக்காட்டி படத்திற்கு தடை விதிக்க மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வழக்கில் உடனடி உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சிறப்பாக தரமாக உருவாகி உள்ள திரைப்படமே வேட்டையன் . பிரம்மாண்ட பொருட் செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
Also Read : பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் சென்னை மாநகராட்சி..!!
ராக்ஸ்டார் அனிருத் இசையில் தரமாக தயாராகி உள்ள இப்படம் விரைவில் திரையரங்குளில் வெளியாக உள்ள நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த பழனிவேலு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்
இந்நிலையில் வேட்டையன் படத்திற்கு தடை கோரிய மனு இன்றே விசாரணைக்கு வந்த நிலையில் இவ்வழக்கில் உடனடி உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.