விசாகப்பட்டினத்தில், காதல் ஜோடி ஒன்று கட்டிப்பிடித்தபடி (hugging) பைக் ஓட்டிச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் காதல் ஜோடி ஒன்று கட்டிப்பிடித்தபடி (hugging) பைக் ஓட்டிச் செல்வது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனதை அடுத்து, அந்த காதல் ஜோடியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், அந்த வீடியோ காட்சியில், பைக் ஓட்டும் வாலிபர் தனது காதலியை பெட்ரோல் டாங்கின் மீது அமர வைத்து கட்டிப்பிடித்தபடி பைக்கை ஓட்டிச் செல்கிறார்.
இதனை அந்த வழியாக காரில் சென்ற நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.
இதனையடுத்து, அந்த வீடியோ காட்சிகள் அனைவராலும் பகிரப்பட்டு வைரலானதை அடுத்து அந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், அந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் அந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த காதல் ஜோடிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அந்த வாலிபர் 22 வயதாகும் அஜய்குமார் என்பதும், அந்தப் பெண் 19 வயதாகும் சைலஜா எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் இருவர் மீதும் அலட்சியமாக வாகனம் ஓட்டுதல், மோட்டார் வாகன சட்டம் 336, 279, 132 மற்றும் 129 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் அவர்கள் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து, இருவரின் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காவல் நிலையத்திற்கு வந்த பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல் ஆணையர் ஸ்ரீகாந்த் கூறுகையில், போக்குவரத்து விதிகளை குடிமக்கள் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்ற போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது பைக்கில் கட்டிபிடித்தபடி காதல் ஜோடிகள் பைக்கில் செல்லும் வீடியோ காட்சிகள் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
విశాఖలో లవర్స్ ఓవర్ యాక్షన్. స్టీల్ ప్లాంట్ మెయిన్ రోడ్డుపై పట్టపగలు బరితెగింపు. హెల్మెట్ లేకుండా యువకుడు డ్రైవింగ్. కాలేజ్ యూనిఫామ్ ధరించి విద్యార్థిని వికృత చేష్టలు చూసి నివ్వెరపోయిన స్థానికులు. #AndhraPradesh #Visakhapatnam #Vizag pic.twitter.com/i2dGgHKElg
— Vizag News Man (@VizagNewsman) December 29, 2022