கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பித்தப்பை கல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு உரிய சிகிச்சை கொடுக்கப்பட்டதாக கிண்டி மருத்துவமனை விளக்கம் கொடுத்துள்ளது.
இதுகுறித்து கிண்டி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
பித்தப்பை கல் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் பெற்று, நோய் தீவிரத்துடன் விக்னேஷ் என இளைஞர் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு வந்தார்.
விக்னேஷ் அழைத்து வரப்பட்ட அன்று அனைத்து டாக்டர்களும் பணியில் இருந்தனர். நவம்பர் 14 ஆம் தேதி அவசர கருவி பொருத்தப்பட்டு விக்னேஷ்-க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் எந்த பாதிப்பும் இல்லை.
குடல் நோய் வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர் அவசர பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது . இறந்த வாலிபருக்கு முறையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது என கிண்டி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் உயிரிழந்துவிட்டதாக குற்றஞ்சாட்டி உறவினர்கள் வாக்குவாதம் செய்து வரும் நிலையில் மருத்துவமனை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது