தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருந்த கட்சி நிர்வாகிகளுக்கு நடிகரும் தவெக தலைவருமான விஜய் மோதிரம் பரிசளித்து கவுரவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது தலைமையின் கீழ் இயங்கும் இந்த கட்சி வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது . கட்சியின் கோட்பாடுகள் பற்றி ஏதும் தெரியாமல் இருந்த நிலையில் லட்சகனான தொண்டர்களின் ஆதரவரோடு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். கட்சியின் முதல் மாநாட்டிற்கு நிலம் அளித்து உதவிய விவசாயிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் விருந்து வைத்தார்.
இதையடுத்து மாநாட்டை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் மோதிரம் பரிசளித்துள்ளார்.