நீட் எதிர்ப்பு உள்ளிட்டவற்றை பேசும் விஜய் எதற்காக தனி கட்சி ஆரம்பிக்க வேண்டும் திமுக அல்லது காங்கிரசில் இணைந்திருக்கலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது :
விஜய்யை எனது மகனை போல் பார்க்கிறேன். அவரை அனைவரும் தங்கள் வீட்டு பிள்ளையாக பார்க்கிறார்கள். விஜய் இப்போது எதற்கு கட்சி ஆரம்பித்திருக்கிறார். ஒவ்வொரு கட்சியும் ஆரம்பிக்கும் முன்பு ஒரு மூலக்கருத்து இருக்கும். ஆனால் விஜய் ஆரம்பிப்பதற்கு என்ன மூல கருத்திருக்கு என்று அவருக்கே தெரியவில்லை.
Also Read : ஈபிஎஸ் அண்ணன் ஓகே சொன்னால் அதிமுகவுக்காக உழைக்க நான் தயார்- விஜய பிரபாகரன்
மக்கள் ஏமாந்தால் முதலமைச்சராக வருவேன், எம்எல்ஏவாக ஆசை என தெளிவாக கூறியிருக்கலாம். ஒத்த கருத்துடன் இருக்கிறார் என்றால் விஜய் ஏன் தனி கட்சியாக ஆரம்பித்து தனி ராஜ்ஜியம் நடத்த வேண்டும் காங்கிரஸில் சேர்ந்திருக்கலாமே! நீட் எதிர்ப்பு உள்ளிட்டவற்றை பேசும் விஜய் திமுக அல்லது காங்கிரசில் இணைந்திருக்கலாம்.
ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு அரசியல் பேசி கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி . ராஜ் பவனில் பல அறைகள் இருக்கின்றன. தினம் ஒரு அறைக்குள் சென்று வருகிறார். எதற்கு என்று கேட்க கூடாது என