‘தமிழக வெற்றி கழகம்’ என்ற தனது கட்சியின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று மாற்ற, (Vijay party) அதன் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகாராக இருக்கும் நடிகர் விஜய் சமீப காலமாக பொதுவெளியில் தோன்றி மக்கள் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் கடந்த பல மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த பிப்.4-ம் தேதி புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” என பெயர் வைத்தார்.
மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் சின்னம், கொடி ஆகியவைற்றை வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய்க்கு சீமான், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மற்றும் நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதையும் படிங்க : cotton candy: புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி – தமிழகத்தில் பஞ்சு மிட்டாய்க்கு தடை!
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சி உதயமானது முதல் அந்த பெயர் குறித்து சிலர் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதாவது கட்சியின் பெயர் (Vijay party) தமிழக வெற்றி கழகமா அல்லது தமிழக வெற்றிக் கழகமா என குழப்பமாக இருந்தது.
இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் சமூக ஆர்வலர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோரும் கடும் விமர்சனம் செய்திருந்தனர்.
அது போல் தமிழறிஞர்களும் இலக்கியவாதிகளும் வெற்றி கழகத்தின் இடையே “க்” என்பதை சேர்க்க வேண்டும் கூறினர்.
அந்த விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காணும் வகையில், அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று முதல் அக்கட்சியின் பேனர்களில் ‘க்’ சேர்க்கப்பட்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்றே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.