நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தால் பாஜகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது :
தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. கூலிப்படைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அதற்கு ஒரு உதாரணம் ஆம்ஸ்ட்ராங் கொலை.
Also Read : ஜார்க்கண்ட்டில் ஹவுரா – மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!!
தனி மனிதர்களுக்கு பாதுகாப்பில்லை, குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உள்ளது. தமிழகத்தில் இதுதான் மிகப்பெரிய கவலையாக உள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தால் பாஜகவிற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. புதிய கட்சிகள் வரலாம், ஆனால் பாஜக வளர்ச்சியை அது பாதிக்காது.
பாரதிய ஜனதா ஒரு தெளிவான கொள்கையோடு உள்ளது. இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மிஞ்சி பாஜக வளர்ந்து வருகிறது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.