உணவு விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவர் குதிரையில் சென்று உணவு வினியோகம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி(viral) வருகிறது.
வித்தியாசமான நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, வினோதமான நிகழ்வுகளாக இருந்தாலும் சரி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டாலே போதும் அது பட்டி தொட்டி எங்கும் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விடும்.
இதனை பயன்டுத்தி பிரபலமாக வேண்டும் என்று நினைக்கும் பலர், வித்தியாசமான தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள். இது போன்று சமூக வலைத்தளங்களில் வரும் பல வீடியோக்களை நாம் பார்த்திருபோம்.
அந்த வகையில் உணவு விநியோகம் செய்யும் சொமேட்டோ ஊழியர் ஒருவர், குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்யும் வீடியோ ஒன்று தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி(viral) வருகிறது.
தனியார் நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்யும் அந்த ஊழியர் தனது பைக்குக்கு பெட்ரோல் இல்லாததால் குதிரையில் சென்று உணவு வினியோகம் செய்திருக்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல் , டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பல பெட்ரோல் பங்க்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் வாகன ஒட்டிகள் ( ஹிட் அண்ட் ரன் ) விபத்து ஏற்படுத்தி வாகன ஓட்டிய வழக்குகளில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டத்தில் ரூ.7 லட்சம் அபராதம், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே மகாராஷ்டிரா முழுவதும் லாரி, டாக்சி, பஸ் ஓட்டுநர்கள் ஏற்கனவே வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில பெட்ரோல் பங்குகளில் மட்டும் பெட்ரோல், டீசல் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட தூரம் வரிசையில் நின்று தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலை நிரப்பி செல்கின்றனர். இதனால் பைக் வைத்திருப்பவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஏற்கனவே மும்பை, தானே, நாக்பூர், புனே, நாசிக் மற்றும் அனைத்து இடங்களிலும் இதே நிலை உள்ளது.
எண்ணெய் கிடங்குகளில் இருந்து தினமும் 900 முதல் 1200 டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல் நிலையங்களுக்கு எரிபொருளை சப்ளை செய்து வந்த நிலையில் இந்த போராட்டம் காரணமாக தற்போது 250 டேங்கர்கள் மட்டுமே பெட்ரோல், டீசல் சப்ளை செய்கின்றன. இதனால் பைக் வைத்திருப்பவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனது பைக்குக்கு பெட்ரோல் இல்லாததால் தனியார் நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்யும் ஊழியர் குதிரையில் சென்று உணவு வினியோகம் செய்தார். இதனை சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியியிட்டுள்ளர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.