தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படும் நிலையில், திராவிட இயக்க வரலாற்றில் இந்நாள் குறிக்கப்படுவது மட்டுமல்ல பொறிக்கப்படும் கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து கூறிருப்பதாவது :
பேரறிஞர் அண்ணாவின்
பிறந்த நாளில்
பிறந்த மண்ணில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடங்கி வைக்கும்
கலைஞர் மகளிர்
உரிமைத் தொகைத் திட்டம்
தாய்க்குலத்தின்
சுதந்திரத்திற்கும்
சுயமரியாதைக்கும்
பக்கபலமிருந்து
தக்கபயன் நல்குவதாகும்
திராவிட இயக்க வரலாற்றில்
இந்த நாள்
குறிக்கப்படுவது மட்டுமல்ல
பொறிக்கப்படும்
இந்தியாவின்
பிற மாநிலங்களும்
தளபதி ஏற்றி வைக்கும்
இந்தத் திருவிளக்கில்
தீபமேற்றிக் கொள்ளலாம் என தனது ட்விட்டர் பதிவில் கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.