ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் 3 வீரர்களை தேர்வு செய்து அவர்களில் சிறப்பாக ஆடிய ஒருத்தரை அந்த மாதத்தின் சிறந்த வீரர் என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த மாதமும் அதே போன்று மூன்று வீரர்கள் தேர்வு செய்யபட்டனர்.
ஜிம்பாப்வே அணியை சேர்ந்த சிக்கந்தர் ரசா, தென் ஆப்பிரிக்கா அணியின் ஆல் ரவுண்டரான டேவிட் மில்லர், மற்றும் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றனர். இந்த பட்டியலிருந்து ஒரு வீரர் இந்த மாதத்தின் சிறந்த வீரர் விருதை பெறுவார்.
இதற்கு முக்கிய அளவு கோளாக அணியின் வெற்றிக்கு தேவைப்படும் இன்னிங்ஸ் மற்றும் ரன் குவிப்பு ஆகியவை கணக்கில் எடுக்கப்படும். இந்த தேர்வில் இந்திய வீரர் கோலி சிறந்த வீரராக தேர்வு செய்யபட்டார். இந்த மாதத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடினார்.
இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து ரன் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளார். இந்த தொடரில் இதுவரை 4 அரை சதம் கடந்துள்ளார். முக்கியமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிக்க நெருக்கடியான தருணத்தில் இந்திய அணி இருந்த போது பாண்டியாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றியடைய செய்தார்.
இந்த விருதை பெற்றபின் கோலி பேசும்போது, “இந்த விருதை பெறுவது மிக மகிழ்ச்சியாக உள்ளது, என்னோடு இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரராகளுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் எனது அணியின் வெற்றிக்கு நான் என்று பாடுபட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்”.