கிரிக்கெட் போட்டிகளில் பல வருடங்களாக அணிக்கு விளையாடுவது என்பது சவாலான காரியம். அதிலும் அணிக்கு ரன்கள் குவிக்கும் முக்கியமான இடமான ஒன் டவுன் பேட்ஸ்மேனாக களமிறங்கி பல ஆண்டுகளாக அணிக்கு விளையாடுவது மிகவும் கடினமான செயல் என்றே சொல்லலாம். கிரிக்கெட் வரலாற்றில் பல நட்சத்திர வீரர்கள் தங்கள் அணிக்காக 500 போட்டிகளை கடந்து விளையாடியுள்ளனர். டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் என மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அணியில் நிலையான இடத்தை பிடித்து, மக்கள் மனத்தில் நின்ற வீரர்கள் மிக குறைவு தான்.
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை இந்த அபூர்வ நிகழ்வை இதுவரை மூன்று வீரர்களே நிகழ்த்தியுள்ளனர். சச்சின், டிராவிட், மற்றும் தோனி இந்த மூன்று பெயர்களுமே இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் அசைக்க முடியாத இடம் பிடித்தவர்கள். இவர்களை தொடர்ந்து 4வதாக இணைந்துள்ளார் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி(Virat Kohli). இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் என்ற ஜாம்பாவனை தொடர்ந்து அந்த இடத்துக்கு அடுத்து பொருத்தமான பெயர் விராட் கோலி என்று சொன்னால் மிகையாகாது.
அடுத்த சச்சின் யார் என்று யோசித்தாலும், அவர்கள் நினைவை தொடும் முதல் நபர் கோலியாக தான் இருக்க முடியும். முன் கால ஜாம்பவாங்களோடு இணைத்து பேசவும், நிகழ்கால கிரிக்கெட்டின் முடி சூடா மன்னன், உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடம், எல்லாவற்றிக்கும் மேலாக இந்தியாவில் கிங் கோலி என்ற பெயர் என இவரது உழைப்பிற்கேற்ற உன்னதமான இடத்தை உலக கிரிக்கெட் இவருக்கு கொடுத்துள்ளது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் தனது 500 வது கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 4வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இந்த போட்டியில் பவுண்டரி அடித்து அரை சதம் கடந்தார். மேலும் இந்த போட்டியில் சதமடித்து 500 வது போட்டியில் சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கைபற்றுவாரா என அவரது ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்நோக்கியுள்ளனர்.