8 வது t20 உலககோப்பை போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றான தகுதி சுற்று போட்டிகள் நடை பெற்று வருகிறது. இதனிடையே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்ற அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணிகள் மோதின
20 ஓவரில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு அணி 186 குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்ட்ரேலியா தொடக்கமே ஆதிக்கம் செலுத்தியது. அணியின் கேப்டன் பின்ச் மற்றும் மிட்சல் மார்ஷ் இந்திய அணியின் பந்து வீச்சை அதிரடியாக விரட்டியது. மார்ஷ் 18 பந்தில் 35 எடுத்து வெளியேறினார். பின்ச் சிறப்பாக ஆடி 54 பந்துகளில் 76 அடித்தார்.ஒரு கட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
இறுதி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷமி பந்து வீசினார். முதல் இரண்டு பந்துகளில் 4 ரன்கள் சென்றன. பின்னர் 4 பந்தில் 7 ரன்கள் தேவைபட்ட நிலையில் ஷமி வீசிய பந்தை கம்மின்ஸ் சிக்சர் அடிக்க லாங் ஆன் தசையில் மேலே அடிக்க சிக்சர் செல்லுமென்று ஏதிர்பார்த்த பொது விராட் கோலி மேலே எழும்பி ஒற்றை கையால் பந்தை பிடித்து விக்கெட் எடுத்தார்.
பந்தை பிடித்த பிறகு பவுண்டரி கோட்டில் கால் படாமல் அசால்ட்டாக கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்த பின்னர் சிரித்தவாறே நடந்து வந்து பந்தை தூக்கி வீசினார். இதனை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்பரித்தனர். கோலி கேட்ச் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
முழு வீடியோ பதிவு :
https://twitter.com/i/status/1581911545755627520