ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் (vladimir putin) தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார் என போரீஸ் ஜான்சன் பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர் விளாதிமிர் புதின் தன்னை தொடர்பு கொண்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யா போர் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், போருக்கு முந்தைய ஆண்டுகளில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் (vladimir putin) மேற்கு நாடுகள் எவ்வாறு போராடியது என்பதை குறிக்கும் வகையில் வெளியாகியுள்ள தகவலில்,
உக்ரைன் போருக்கு முன்னர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தன்னை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை காயப்படுத்த விரும்பம் இல்லை என்றும் தன்னை ஒழிக்க ஒரே ஒரு ஏவுகணை மட்டும் போதும் என்ற தொனியில் தன்னை மிரட்டியதாகவும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.