தமிழகத்தை உலுக்கவைத்த அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள காமுக கமுக்கன் ஞானசேகரனிடம் இரண்டு மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உளது .
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசால் நடத்தப்படும் இந்த கல்லூரியிலேயே மாணவிக்கு இப்படி ஒரு அநீதி நடந்திருப்பதை கண்டு கொதித்தெழுந்த பலரும் இன்று வரை கண்டன குரல்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
அந்த ஒரு மாணவி மட்டுமின்றி பல இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த ஞானசேகரன் என்ற அரக்கனை போலீசார் கைது செய்து அவனிடம் இரவு பகலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Also Read : அஜித்தின் விடாமுயற்சிக்கு பலன் கிடைத்ததா..? – ரசிகர்கள் REVIEW இதோ..!!
இந்த குற்றச்சம்பவத்தில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளியா இல்லை வேறு யாரும் சம்மந்தப்பட்டுள்ளாரா என்று கேள்வி அனைவர்க்கும் எழுந்துள்ள நிலையில் இன்று ஞானசேகரனுக்கு இரண்டு மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
தடயவியல் துறை துணை இயக்குனர் சோபியா, உதவி இயக்குனர் நளினி நடராஜன், தொழில் நுட்பபிரிவு அதிகாரி லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொண்டதாகவும் ஞானசேகரனை பல வகையாக பேச சொல்லி அவை அனைத்தையும் வீடியோ பதிவு செய்து கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
குரல் மாதிரி சோதனைக்கு பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு ஞானசேகரன் அழைத்துச் சொல்லப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பான விரிவான அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தடய அறிவியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவும் தகவல் வெளியாகி உள்ளது.