தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாக்க எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை விடுத்துள்ள செய்துகுறிப்பில் கூறிருப்பதாவது :
என் மண் என் மக்கள் பயணம், நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் ஆரவாரத்துடன் நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது
தமிழகத்தை தற்போது ஆண்டு வரும் திமுக அரசு எந்த மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் மதிப்பதில்லை.

முதுமலை வனவிலங்கு காப்பகம், கூடலூர் தொகுதியில் தான் உள்ளது. தமிழகத்தின் மாநில விலங்கு எது என்று கேட்டால் அது நம் மாநிலத்தில் பலருக்கு தெரியாது. நீலகிரி மாவட்டத்தின் வரையாடு தான் தமிழகத்தின் மாநில விலங்கு. இந்த உயிரினம் இன்று அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது தான் இத்தனை ஆண்டுகளாக நம் மாநில விலங்கை நாம் பாதுகாத்த லட்சணம்.
வரையாடுகளை காக்க தற்போதுதான் 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. கடந்த 40 நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் இறந்துவிட்டன. இதை விசாரிக்க நேற்று மத்திய புலிகள் காக்கும் இயக்கத்திலிருந்து அதிகாரிகள் நீலகிரி வந்துள்ளார்கள். தமிழின் பெருமையை, தமிழகத்தின் பெருமையை எப்போதும் மறைத்து தங்கள் குடும்ப பெருமையை மட்டுமே பேசுவது திமுகவுக்கு வழக்கம்.

நீலகிரி மாவட்ட மக்கள் பிரச்சினைக்காக, பாஜக எப்போதும் களத்தில் போராடியிருக்கிறது. டிசம்பர் 2021 – Sipcot அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த நினைத்த தமிழக அரசுக்குத் துணை நின்ற, இந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக விவசாயிகளை சந்தித்துப் போராட்டம் நடத்தி, விவசாய நிலங்களை காப்பாற்றினோம்.
தமிழகத்தை தற்போது ஆண்டு வரும் திமுக அரசு எந்த மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் மதிப்பதில்லை. எனவே தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாக்க பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

எதிர்வரும் வரும் பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் இருந்து 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்துபவர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
உண்மையான வளர்ச்சியைப் பெற, மக்கள் தேவைகளைக் கேட்டுப் பெற, மத்தியிலும் நமது தொகுதியிலும் பாஜகவுக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.