தெலங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளுக்கு இன்று சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை கடந்த 28 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் தற்போது அங்குள்ள 119 தொகுதிகளுக்கும் ஒருகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தெலங்கானாவில் 3.26 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் . இந்நிலையில் தெலங்கானாவில் ஆளும் பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில் இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.