தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது .
இந்நிலையில் தமிழகத்தில் அங்கங்கே பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள சில முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
- 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2099 மில்லியன் கன அடியாக உள்ளது. 159 கன அடி நீர் வெளியேற்றம்
- 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 140 மில்லியன் கன அடியாக உள்ளது. 30 கன அடி நீர் வெளியேற்றம்
- 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 326 மில்லியன் கன அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வெளியேற்றம்