“அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . மழை நின்றாலும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் இன்னும் வடியாமல் இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பால் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கிடைப்பதை உறுதிசெய்ய, களத்தில் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையோடு களப்பணியைத் தொடர்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில் :
சென்னையில் உள்ள பெரும்பாலான இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருக்கிறது இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் அவர்களுக்கு அன்றாட தேவைகளும் கிடைக்காமல் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.
மின் விநியோகம் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள் விரைவில் நிலைமை மாறும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.