உலகெங்கும் இருக்கும் குழந்தை தொழிலாளர்முறை என்னும் கொடிய அவலத்தை முற்றாகத் துடைத்தெறிய முன்வர வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துவதாக அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிருப்பதாவது :
சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளான ( ஜூன் 12 ) இன்று உலகெங்கும் இருக்கும் குழந்தைகள் யாவருமே கல்விபெற வேண்டும். விளையாட வேண்டும். மாறாக, வறுமையைக் காரணம் காட்டி, பெற்றோராயினும் அவர்களைத் தொழிலாளர்களாக வதைத்திடக் கூடாது. அந்த வன்கொடுமையை வன்மையாக எதிர்ப்போம்.
புரட்சியாளர் அம்பேத்கர் குழந்தை தொழிலாளர் முறையைக் கடுமையாக எதிர்த்ததோடு அதற்கு எதிராக சட்டமும் கொண்டு வந்தார். இந்நாளில் அவரை நன்றியுணர்வோடு நினைவுகூர்வோம்.
இந்திய கூட்டரசும் மாநில அரசுகளும் குழந்தை தொழிலாளர்முறை என்னும் கொடிய அவலத்தை முற்றாகத் துடைத்தெறிய முன்வர வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.