மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு மத்திய அரசு நிதிக்கொடுக்கவில்லை என்றால் JICA அமைப்பின் மூலம் நிதிபெற்று தமிழ்நாடு அரசே பணிகளை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .
செய்தியாளர்களை இன்று சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது :
மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு நிதி வழங்கும் ஜப்பான் நிறுவனத்தின் (JICA) துணை தலைவரை இன்று சந்தித்தோம் இதன் டெண்டர் 2024க்குள் முடித்து, 2028ல் இறுதியாகும் என தெரிவித்தார்
மத்திய அரசு போதுமான முயற்சி மேற்கொள்ளாவிடில், JICA அமைப்பின் மூலம் நிதிபெற்று தமிழ்நாடு அரசே பணிகளை தொடங்கவும் திட்டமிட்டு உள்ளோம்.
மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எண்ணத்தில்தான், மதுரை எய்ம்ஸ் கல்லூரியை ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடத்தி ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறோம்
மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி கல்லூரி தோப்பூருக்கு மாற்றப்பட உள்ளது; 5 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகே ஹோமியோபதி கல்லூரி கட்டப்பட உள்ளது ஓராண்டுக்குள் இதற்கான பணிகள் தொடங்கும் என மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்