நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைமையில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி டி ஆர் பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவிடம் (VCK press meet) போட்டியிட விரும்பும் விருப்ப பட்டியலை கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியதாவது :
விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளன நான்கு தொகுதிகளை போட்டியிட கேட்டுள்ளோம்
அகில இந்திய அளவில் தொடர்ந்து திமுக தலைமையிலான கூட்டணி தான் அதிக தேர்தல்களை சந்தித்துள்ளது.
அவ்வாறு கொள்கை சார்ந்து இயங்கும் கூட்டணியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது மேலும் இது இந்திய கூட்டணியாக வலுவடைந்துள்ளது
அகில இந்திய அளவில் பாரதிய ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை செயல்திட்டத்துடன் இந்தியா கூட்டணி இயங்கி வருகிறது.
இந்தியா கூட்டணியில் அங்கம் வைக்கும் திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
சிதம்பரம் விழுப்புரம் காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய நான்கு தனி தொகுதிகளை குறிப்பிட்டு அதில் மூன்று தொகுதிகள் வேண்டும் என்றும் பொது தொகுதிகளில்
பெரம்பலூர் மயிலாடுதுறை கள்ளக்குறிச்சி ஆகிய பொதுத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்று வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்
தொகுதி இறுதி செய்த பின்னர் போட்டியிடும் சின்னம் குறித்து (VCK press meet) அறிவிக்கப்படும் . இன்றைக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட முறை வேதனை அளிக்கிறது
ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் ஆளுநராக செயல்படவில்லை ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்பட்டு வருகிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கரைகிறது.
இதற்காகவே அவர் ஆளுநர் பதவியில் நீடிக்க கூடாது அவரை நீக்குவதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைக் கட்சி வேண்டுகோள் விடுகிறது.
எதிர் வரும் தேர்தலின் காரணத்தால் தமிழகத்தில் உள்ள அணைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக கூட்டணி பேச்சு வார்த்தையில் இருந்து வருகிறது.
Also Read : https://itamiltv.com/vetri-duraisamy-funeral-this-evening/
இதில் அன்னான் தம்பி போல பழகி வந்த அதிமுகவும் பாஜகவும் சில பல கருத்து வேறுபாடுகளால் தற்போது கூட்டணியில் இருந்து விலகி தற்போது தனி தனியாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் இறுதியில் வெல்லப்போவது யார் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.