கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, ஜனவரி 3ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (weather forecast) தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில் ஜனவரி 2ம் தேதி தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்பதால் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக 3ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (weather forecast) தகவல் தெரிவித்துள்ளது. மேலும், உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.