தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இடங்களில் இன்று கனமழை பெய்து வரும் நிலையில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என்ற தகவலை Weather Man TN பிரபல தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.
இதுவரை மிதமான மழைதான் பெய்து வந்தது. தற்போதுதான் மழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து வருகின்றன. அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
சென்னையில் இதுவரை 50 முதல் 70 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.
தென் சென்னையின் சில பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான வாய்ப்புகள் இல்லை.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடர்ந்த மேகங்கள் இருப்பதால், அடுத்த சில மணி நேரங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என Weather Man TN பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள நிலையில் தற்போது பிரதீப் ஜான் இப்படி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மிக்ஜாம் புயலால் ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன .
இந்நிலையில் தற்போது மீண்டும் அங்கு கனமழை என்ற செய்தி வந்துள்ளதால் தமிழக அரசு தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதுமட்டுமின்றி ஏரிகள குளங்கள் அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க பட்டு வருகிறது .
Also Read : https://itamiltv.com/heavy-rain-tn-educational-institutes-have-holiday-today/
மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்தே இன்னும் மக்கள் மீண்டு வர முடியாத நிலையில் தற்போது சென்னை உளப்பட அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மீண்டும் ஊருக்குள் வெள்ளம் வந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அம்மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.