8 வது t20 உலககோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது . முதல் சுற்றான தகுதி சுற்று போட்டிகள் நடை பெற்று வருகிறது. ஹோபார்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ( west indies ) மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்தது.
தொடக்க வீரராக களங்கண்ட சார்லஸ் அற்புதமான தொடக்கம் அமைத்தார். மற்றொரு அதிரடி வீரரான மேயர்ஸ் 13 ரன்னில் வெளியேறினார். ஆனால் சார்லஸ் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 10 ஓவர் முடிவில் 77 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அடுத்து வந்த ஓவர்களில் வரிசையாக விக்கெட்டை இழந்தது.
13.3 ஓவர் முடிவில் 101 ரன்னுக்கு 6 விக்கெட்களை பறிகொடுத்து திணறியது . இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அதிரடி வீரர் போவல் மற்றும் ஹொசேன் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை அடித்து துவைத்தனர். இருவரின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 153 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சார்லஸ் 45 ரன்கள் சேர்த்தார்.
ஜிம்பாப்வே அணியின் ரசா சிறப்பாக பந்து வீசி 19 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டை சாய்த்தர். இதனை தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நிதானமாக ஐறல குவித்தது. மதிர்வே 27 ரன்னிலும், கேப்டன் சக்பாவா 13 ரன்னிலும் வெளியேற ஜிம்பாபியவே சரிய தொடங்கியது.
அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். பெரிடக்கும் எதிர்பார்க்கபட்ட ரசா 14 ரன்னில் அவுட் ஆனார். 18.2 ஓவரில் அந்த அணி 122 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேக பந்து வீச்சாளர் ஜோசப் ஜிம்பாப்வே அணியின் பேட்டிங் வரிசையை தரைமட்டமாக்கினார்.
4 ஓவர் வீசிய ஜோசப் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டை கைபற்றினார் . ஆல் ரவுண்டே ஹோல்டர் தன் பங்குக்கு 3 விக்கெட்டை வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலககோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு செல்ல வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த வெற்றியின் மூலம் கடைசியாக ஒரு வாய்ப்பு அமைத்துள்ளது.