2024 -25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (Plans) இன்று தாக்கல் செய்துள்ளார் .
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் கல்விக்கு என்னென்ன திட்டங்கள் எவ்ளோ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க :
உயர்கல்வித் துறைக்கு ரூ.8,212 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,0742 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நான் முதல்வர் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு வேலை வாய்ப்பு பயிற்சி மையங்கள் சென்னை, கோவை, மதுரையில் அமைக்கப்படும்.
மத்திய அரசு பணியில் சேர ஆயிரம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதன் மூலம் சென்னை, கோவை, மதுரையில் இளைஞர்களுக்கு வங்கிப்பணி, ரயில்வே பணிக்கு பயிற்சி அளிக்கப்படும்.
தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக்குகள் தரம் உயர்த்தப்படும்.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழக் ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
நான் முதல்வர் திட்டத்தில் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.200 கோடியில் திறன் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
கோவையில் தகவல் தொழில் நுட்பபூங்கா 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடியில் அமைக்கப்படும்.
மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரி, விடுதிக் கட்டணங்களை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும்.
அடுத்த 2 ஆண்டுகளில் 5000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்படும்.
இதுவரை 60,567 இளைஞர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு
காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மேலும் 2,50,000 மாணவர்கள் இத்திட்டம் மூலம் பயன்பெறுவார்கள். நடப்பாண்டில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு
Alshttps://itamiltv.com/bjp-national-council-meet-bjp-condemns-congress-and-dmk/o Read :
பள்ளிக் கல்வித்துறைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு
ரூ.1000 கோடி செலவில் பள்ளி கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். ரூ.300 கோடி மதிப்பீட்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டம் (Plans) அறிமுகம் -அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்