சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழ் நாட்டில் முக்கியமான காய்கறி சந்தைகளில் முக்கியமானது கோயம்பேடு காய்கறி சந்தை. இந்த சந்தைகளில் இருந்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளில் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கொண்டுவரப்படும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவு காரணமாக காய்கறிகளின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. அதன் படி இன்றைய காய்கறிகளின் விலை விளவரங்கள் குறித்து பார்க்கலாம்.
சென்னையில் தக்காளியின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ 200 ரூபாய் வரை அதிரித்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் பின்னர் படிப்படியாக குறைந்து 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
அதன் இன்று ஒரு கிலோ தக்காளி 38 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. அதே போல் வெங்காயத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி சின்ன வெங்காயம் ஒரு கிலோவுக்கு 110 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 64 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.