வாட்ஸ்அப்பில் Custom Lists என்னும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம்.
உலக மக்களில் பெரும்பாலானோர் அதிகம் பயன்படுத்தி வரும் செயலியாக வளம் வரும் செயலியே வாட்ஸ்அப் . மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த செயலியை இதுவரை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
மார்க்கெட்டில் நிலைத்து நிற்க மாதா மாதம் பல அப்டேட்டுகளை கொடுத்து வரும் மெட்டா நிறுவனம் தற்போது வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
அதன்படி வாட்ஸ்அப்பில் Custom Lists என்னும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம்.
Also Read : இன்று கோவை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – பயணத்திட்டத்தின் முழு விவரம் இதோ..!!
வாட்ஸ்அப் Chat-களை நண்பர்கள், குடும்பம் என தனித்தனியாக பிரித்து ஒருங்கிணைக்கும் வகையில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Chat Screen-ல் உள்ள + icon-ஐ க்ளிக் செய்து புதிதாக லிஸ்ட் உருவாக்கி தேவையான Chat-களை சேர்த்துக்கொள்ளலாம் எனவும் மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
பயனர்களின் வசதியை மேம்படுத்த இந்த அப்டேட் கொண்டுவந்துள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த அப்டேட் உண்மையில் ரொம்பவே பயனுள்ளதாக பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.