தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலை உருவாகி உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியாதவது :
தமிழகத்தில் அரசியல் படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்டம் – ஒழுங்கு என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலை உருவாகியுள்ளது.
Also Read : ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் – கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்..!!
15 நாட்களுக்கு ஒருமுறை உளவுத்துறை மற்றும் காவல்துறையினருடன் சட்டம் – ஒழுங்கு குறித்து ஆய்வு நடத்த வேண்டும். சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதியில் உள்ள காவல் அதிகாரி தான் அதற்கு பொறுப்பு என அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் உளவுத்துறை எங்கே உள்ளது? காலையில் உளவுத்துறையின் தலைவர் முதல்வருக்கு, முந்தைய நாள் நிகழ்வை விவரிப்பார். தற்போது இதை யாரிடம் சொல்வது என்று அதன் தலைவருக்குப் புரியவில்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.