உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்ற கேள்வி அமெரிக்கர்களை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரிடத்திலும் அரண் போல் எழுந்து நிற்கிறது . இந்நிலையில் தற்போதைய அதிபராக இருக்கும் ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் நின்றிந்த நிலையில் சில பல காரணங்களால் அவர் தேர்தலில் இருந்து விலகி கமலா ஹாரிஸ் அவர்களை அதிபர் வேட்பாளராக பைடன் அறிவித்தார் . இதேபோல் மறுபக்கம் அவருக்கு பொடியாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்த இருவருக்கும் மத்தியில் கடுமையான போட்டி நிலவும் நிலையில் இருவருக்கும் சரிசமமான ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
Also Read : உத்தரகாண்ட் பேருந்து விபத்து – பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..!!
இந்நிலையில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நாளை காலை 5.30 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு பதிவு முடிந்த உடனேயே மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
50 மாகாணங்களில் மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளில் 270க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை பெறும் வேட்பாளரே அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்