கூல் லிப் போன்ற போதைப்பொருட்களுக்கு நாடு முழுவதும் ஏன் தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பிய வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கடந்த 9 மாதங்களில் 20,000க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 132 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Also Read : முடங்காமல் இருக்கும் மூடநம்பிக்கை : திருவண்ணாமலையில் பெண்ணை கொலை செய்த போலி சாமியார்..!!
உட்கொள்ள பாதுகாப்பானது இல்லை எனக்கூறி ஒரு மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பொருள், மற்ற மாநிலத்தில் எப்படி பாதுகாப்பானதாக இருக்கும் என நீதிபதி பரதசக்ரவர்த்தி எதிர் கேள்வி எழுப்பினார்.
ஒரு கட்டத்தில் வாதங்கள் நீண்டுகொண்டே செல்ல மத்திய அரசு மற்றும் குட்கா உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வரும் 25ம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வலக்கை ஒத்திவைத்துள்ளது.