உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் போட்டியான விம்பிள்டன்(Wimbledon ) போட்டி தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. உலகின் முதல் நிலை வீரர்கள் காலிறுதி முடிந்து நேற்றை அரை இறுதி போட்டியில் விளையாடினர். இதில் உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் டேனியலை 6-3,6-3,6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு போட்டியில் டென்னிஸ் போட்டிகளில் ஜாம்பவானான செர்பியாவின் ஜோக்கோவிச் சின்னரை 6-3, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இவர்களை போலவே பெண்கள் பிரிவில் வான்ரோசவா, ஜாபியர் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதுவரை நடந்த விம்பல்டன் போட்டிகளில் தோல்வியே தழுவாமல் 10 முறை விளையாடி வரும் ஜோக்கோவிச் தனது ஆதிக்கத்தை இந்த தொடரிலும் தக்கவைப்பாரா? அல்லது முதல் முறை தோல்வியை தழுவி கார்லோஸ் வெற்றி பெருவாரா என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக 2018,2019,2021,2022 என கடந்த 4 முறை நடந்த விம்பிள்டன் தொடரின் பட்டத்தை ஜோக்கோவிச் தான் வென்றுள்ளார்.
மொத்தமாக விம்பிள்டன் போட்டிகளில் 7 பட்டங்களை வென்று அதிக விம்பிள்டன் பட்டங்கள் வென்றவர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இம்முறையும் தொடர்ந்து வெற்றி பெற்று தொடர்ந்து 5வது விம்பிள்டன் மட்டுமின்றி 8 முறை விம்பிள்டன் பட்டம் பெற்று அதிகம் விம்பிள்டன் பட்டம் வென்ற பெடரரின் சாதனையை சமன் செய்வாரென அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர்.
இந்த விம்பிள்டன் வென்றால் ஒரே ஆண்டில் இரண்டு விதமான தொடரின் கோப்பைகளை வென்ற வீரர் என்ற சாதனையை பெறுவார் ஜோக்கோவிச். இதற்கு முன்னதாக பிரெஞ்ச் ஓபன் தொடர் கோப்பை வென்று உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற பெயரை தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.