ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரையில் அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அண்மையில் பங்கேற்றார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் நடைபயணத்தில் பங்கேற்ற தனது கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் சென்னை, ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில், கமல்ஹாசன் விருந்து வழங்கினார்.
முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், பா.ஜ.க மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். அதனை நாம் எதிர்க்க வேண்டும். அதன் காரணமாகவே நாம் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றோம்.
மதத்திற்கு எதிரான அரசியலை தடுக்க வேண்டும், ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் பாரத் ஜோடோ அமைந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நான் (ஏ) சொன்னால் (ஏ) சொல்லுங்கள், பி சொன்னால் (பி) சொல்லுங்கள், (சி) சொன்னால் (சி) சொல்லுங்கள்.
உங்கள் ஆதரவுடன் மட்டுமே தலைமை பொறுப்பில் உள்ளேன். எனவே, தலைமை கட்டளைகளை, உத்தரவுகளை மீறுபவர்கள் மீது பாரா முகத்தோடு இருக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
நன்றாக பேச வருபவர்கள் அவர்களுக்கு கீழ் 10 நபர்களை தயார் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் நல்லது கெட்டது. அனைத்தையும் நான் பார்த்துகொண்டு உள்ளேன். உங்களுக்கு பஞ்சாயத்து செய்ய என்னிடம் நேரமில்லை. எந்த கட்சியாக இருந்தாலும் மதத்தை வைத்து இங்கு அரசியல் செய்ய முடியாது, ஏன் என்றால் இது தமிழ்நாடு.
அண்ணா என்பது அவர் பெயர் மட்டும் இல்லை அது ஒரு உறவு.
மக்கள் நம்முடைய நலனில் யார் பேசுகிறார்களோ அவர்கள் பின் செல்வார்கள். அந்த நலனை நான் தேடி கொண்டுள்ளேன். கட்சியை அடுத்த கட்டத்திற்கு நோக்கி நகர்த்துகிறோம். இந்தியா சிதைந்து விட கூடாது, என்பதற்காக நடப்பது தான் பாரத் ஜாடோ யாத்திரை.
தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் வந்துள்ளது. இதை மாற்ற சொல்லுவதற்கு அவர் யார்? அவருடைய பெயரை ரவி என்பதை புவி என மாற்றி கொள்வாரா?மதத்தை அரசியலின் கருவியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேசினார்