தேர்தல் பத்திரங்கள் அரசமைப்பிற்கு எதிரானது எனக் கூறி அதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கும் நிலையில் அதற்கு தார்மீக (Minister criticize) பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்வாரா? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது.
பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.
பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்கள் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்.
ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம்.
15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும்.
இந்நிலையில் இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் .
இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த விசாரணையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதனபடி அரசியல் கட்சிகள் அதிக அளவில் நிதிகளை பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது என கூறி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களது இத்தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது :
தேர்தல் பத்திரங்கள் அரசமைப்பிற்கு எதிரானது எனக் கூறி அதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கும் நிலையில் அதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்வாரா?
Also Read : https://itamiltv.com/cmbt-bus-stand-should-be-converted-into-a-green-park/
Reserve வங்கி மற்றும் சட்டத் துறையின் கடுமையான ஆட்சே பனைகளை மீறியும் வழக்கமான ஆலோசனை (Minister criticize) நடைமுறைகளை புறக்கணித்தும்
தேர்தல் பத்திரங்களை மோடி அரசு நடைமுறைப்படுத்தியது மட்டுமல்லாமல் 6000 கோடி தேர்தல் நிதியும், தேர்தல் பத்திரம் மூலமாக பா.ஜ.க பெற்றுள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.