நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் 2 வது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 278 ரன்கள் இலக்காக அமைத்தது. அந்த அணியின் மூத்த வீரர் மேத்திவ்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இதனால் இரண்டாவது பாதியில் இலங்கை முன்னிலை பெற்றது.
மேலும் இந்த போட்டியில் வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், இலங்கை மிகுந்த கவனத்துடன் பேட் செய்து இலக்கை அமைத்தது. இறுதி நாளான இன்று 285 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த நியூசிலாந்து நிதானமாக விளையாடி வெற்றியை நெருங்கியது.
அணியின் முன்னணி வீரர் வில்லியம்சன் சதமடிக்க வெற்றி உறுதியானது. ஆட்டத்தின் இறுதி வரை நின்று விளையாடி இலக்கை இறுதி பந்தில் எட்டி பிடித்தது நியூசிலாந்து.இரண்டு போட்டிகள் அடங்கிய இந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற வென்று முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என்று நினைத்த இலங்கையின் கனவு கரைந்தது. இந்த போட்டியை நியூசிலாந்து அணி வென்றதால், இந்திய அணி இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. மீதம் இருக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றால் இலங்கை அணிக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. ஜூன் மாதம் 7 ஆம் தேதி நடக்கவுள்ள இறுதி போட்டியில் ஆஸ்ட்ரேலியாவை இந்திய அணி எதிர்கொள்கிறது.