ஒவ்வொரு நாளும் இணையத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் ஏராளமான நிகழ்வுகள் குறித்த செய்திகள் பெரிய அளவில் வைரல் (viral post) ஆகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
அவ்வாறு வைரலாகும் நிகழ்வுகள் சில வழக்கத்திற்கு மாறாக சற்று வினோதமாகவோ அல்லது மனதை நெகிழ வைக்க கூடிய வகையிலோ அல்லது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவோ இருந்தால் அது பெரிய அளவில் பலர் கவனத்தையும் பெற்று அனைவராலும் பகிரப்பட்டு வைரலாக (viral post) மாறும்.
இந்நிலையில், அதுபோன்ற ஒரு சம்பவம் குறித்த பதிவு தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த சாஸ்வதி சிவா என்ற பெண் ஒருவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இந்த நிலையில், தற்போது அவருக்கு விவாகரத்து ஆகி நான்காண்டுகள் முடிந்த நிலையில், அதனை கொண்டாடவும் செய்துள்ளார்.
மேலும், சாஸ்வதி பகிர்ந்துள்ள அந்த பதிவில், கடந்த நான்கு ஆண்டுகளாக, பல்வேறு சுவாரஸ்யமான செயல்களைச் செய்வதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், இப்படி ஒரு விஷயத்தை தனது வாழ்வில் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கையில் நடக்கும் திட்டமிடப்படாத பல்வேறு நிகழ்வுகள் பெரும்பாலும் அழகான முடிவுகளை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய தொழிலில் திறம்பட செயல்பட்டு வரும் சாஸ்வதி, தனது மன அழுத்தத்தை பார்த்துக் கொள்வதற்காக Therapy உள்ளிட்ட சில விஷயங்களையும் கையாண்டு வருவதாகவும் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.
அதே போல, விவாகரத்தான பின் தனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்தும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக தனக்கு விவாகரத்து கிடைத்த அந்த நாளை சுதந்திரம் கிடைத்த நாள் என்றும் கருதி கொண்டாடி வருகிறார் சாஸ்வதி.
இந்நிலையில், சாஸ்வதியின் இந்த பதிவு அனைவராலும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.