பொதுவாக, வினோதமான பொழுதுபோக்குகள் மற்றும் போதை பழக்கம் (mattress) உள்ளவர்களின் செயல்கள் நம்மை முற்றிலும் அதிர்ச்சியடையச் செய்கின்றன.
அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் என்ற பெண் ஒருவர் சுமார் 20 ஆண்டுகளாக மெத்தைகளை (mattress) சாப்பிட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும், தினமும் ஒரு சதுர அடி மெத்தையை சாப்பிடுவதாக ஜெனிபர், ‘மை ஸ்ட்ரேஞ்ச் அடிக்ஷன்’ என்ற நிகழ்ச்சியில் தனது விசித்திரமான போதை பற்றி பேசியுள்ளார்.
TLC இன் “My Strange Addiction” என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜெனிஃபர் என்ற பெண் தான் ஒரு விசித்திரமான போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக கூறினார்.
மேலும், ஜெனிஃபர் சுமார் 20 வருடங்களாக மெத்தைகளை சாப்பிட்டு வருவதாகவும் கூறினார். இந்த வினோத பழக்கம் அவருக்கு, 5 வயதாக இருந்தபோது தொடங்கியது எனவும் கூறினார்.
ஜெனிஃபர் சிறுமியாக அந்த நேரத்தில், அவர்களது வீட்டில் இருந்த காரின் சீட்டில் இருந்து இப்படி உட்கொள்ள ஆரம்பித்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக, நாளடைவில் இந்த பழக்கம் மோசமாகி விட்டது என்றும் கூறினார்.
இந்நிலையில், தற்போது ஜெனிஃபர் தினமும் ஒரு சதுர அடி மெத்தை சாப்பிடும் திறன் பெற்றிருப்பதாகவும் கூறினார்.
தினமும் காலையில் நான் நல்ல விஷயங்களுடன் தொடங்குகிறேன். அதாவது, தலையணையை சாப்பிடுவது தான் எனக்கு நல்ல விஷயம். மயோனைஸ், வெண்ணெய் அல்லது அது எதுவுமில்லாமல், சாப்பிட விரும்புவேன் என்றும் கூறியுள்ளார் ஜெனிஃபர்.
ஆனால், மெத்தையில் இருந்து துர்நாற்றம் வீசினால் அல்லது கடற்பாசி எல்லாம் போய்விட்டால் அதை சாப்பிடுவதை நிறுத்துவதாகவும் அவர் கூறினார்.
அதிர்ஷ்டவசமாக, ஜெனிபரின் அடிமைத்தனம் அவரது உயிருக்கு ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தவில்லை.
“மெத்தைகள், சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் உண்மையில் உங்களுக்கு மட்டுமே இருக்கும். அது என் உடலில் நுழைந்து என் உடலை விட்டு வெளியேறுகிறது என்று கூறினார்.
இதற்கிடையில், மெத்தைகளை சாப்பிடுவதை நான் கட்டுப்படுத்தவில்லை என்றால், தன்னுடைய தலைவிதி துரதிர்ஷ்டவசமாக மாறக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் அவருக்கு கல்லீரல் பாதிப்பு மற்றும் குடல் அடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார்.