2023 மகளிர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி வரும் 29 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற இருக்கும் மகளிர் ஜூனியர் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி தற்போது ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
தொடக்க போட்டியில் கனடா அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணி, அடுத்ததாக நவம்பர் 30 ஆம் தேதி ஜெர்மனியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது . இதையடுத்து டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பெல்ஜியம் அணியுடன் இந்திய அணி மோதுகிறது.
இதையடுத்து டிசம்பர் 6 ஆம் தேதி காலிறுதிப் போட்டியும், டிசம்பர் 8ஆம் தேதி அரையிறுதிப் போட்டியும், இறுதிப் போட்டி டிசம்பர் 10ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 2023 மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
குஷ்பு, மாதுரி கிண்டோ, நீலம், ப்ரீத்தி (கேப்டன்), ஜோதி சிங், ரோப்னி குமாரி, மஹிமா டெடே, மஞ்சு சோர்சியா, ஜோதி சாத்ரி, ஹினா பானோ, சுஜாதா குஜூர், ருதுஜா தாதாசோ பிசல், சாக்ஷி ராணா, மும்தாஜ் கான், அன்னு, தீபிகா சோரெங், டிபி மோனிகா டோப்போ, சுனெலிதா டோப்போ, தூணோஜம் நிருபமா தேவி, ஜோதி எதுலா.
இதுநாள் வரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்திய சார்பில் பங்கேற்ற வீரர் , வீராங்கனைகள் ,பதக்கங்கள் பல வென்று நாட்டிற்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர் . அதேபோல் வரும் 29 ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கும் இந்த மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.