மகளிர் டி20 உலக்கோப்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ததுள்ளது.
உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இம்மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரின் லீக் போட்டிகள் துபாய், ஷார்ஜா ஆகிய 2 இடங்களில் நடைபெற உள்ளது.
Also Read : மெரினா விமான சாகச நிகழ்வு, லிம்கா சாதனை – விமானப்படை பெருமிதம்..!!
இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய – பாகிஸ்தான் அணி விளையாடியது . இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது . ஆரம்பம் முதல் பொறுப்புடன் ஆடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த இலக்கை கடந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.