மகளிர் டி20 உலக்கோப்பை இறுதி போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி கோப்பையை கைப்பற்றி கெத்துக்காட்டி உள்ளது.
நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இத்தொடரின் இறுதிபோட்டி துபாயில் நடைபெற்றது.
தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் கண்டன.
Also Read : 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி
20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன்மூலம் நியூஸிலாந்து அணி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.