தமிழ்ன்னை சிலை அருகில் உலக தலை காயம் விழிப்புணர்வு நாள் (World Head Injury Awareness Day) பேரணியை துவக்கி வைத்த மாநகராட்சி ஆணையாளர்.
மதுரை தமுக்கம் தமிழன்னை சிலை அருகே உலக தலை காயம் விழிப்புணர்வு நாளை (World Head Injury Awareness Day) முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆறுமுகசாமி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
நிகழ்வின் தொடக்கத்தில் உலக தலைக்காய விழிப்புணர்வு நாள் பேரணியை மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் சேது இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் என மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு தமுக்கம் தமிழன்னை சிலையில் இருந்து கோரிப்பாளையம் சிக்னல் வழியாக பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது திருவள்ளுவர் சிலை அருகே நிறைவு பெற்றது.