நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்திய வீரர்கள் அனைவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து நாட்டிற்கு பறந்துவிட்டனர் .
ஜூன் மாதம் 7ம் தேதி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக விளையாட உள்ளது .
இந்திய அணியின் நம்பிக்கை நாயகர்களாக இருந்து வந்த ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் காயத்தால் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை சற்று கூர்ந்து பார்க்கும்போது நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிரடி காட்டிய சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா , ரஹானே ஆகியோர் அணியின் நம்பிக்கையாக உள்ளனர் . மேலும் இவர்களுக்கு பக்கபலமாய் இருக்க ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் .
இந்த பக்கம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை பார்க்கும் போது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் அணியின் தூண்களாக உள்ளனர் .
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கெத்தாக வென்று காட்டவேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியின் வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் .
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டதால் நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
இதில் நாளை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .