பிரிட்டிஷ் Blloger ஸ்குவாட்டர் ஸ்பாட்டர் ஆஸ்கி உலகில் உள்ள ஏழு கண்டங்களில், ஆறு கண்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலகின் மிக மோசமான கழிவறையை கண்டுபிடித்துள்ளார்.
உலகைச் சுற்றிப் பார்க்கவும், புதிய கலாச்சாரங்களை அனுபவிக்கவும், புதிய நபர்களை சந்திக்கவும், பொழுதுபோக்கு சுற்றுலா,இயற்கை சுற்றுலா,இன்ப சுற்றுலா,விளையாட்டு சுற்றுலா,மத சுற்றுலா,மருத்துவச் சுற்றுலா என பல்வேறு வகையான சுற்றுலாக்கள் உள்ளன.
ஆனால், பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த பதிவர் ஒருவர் வித்யாசமான முறையில், உலகின் மிக மோசமான கழிவறையை தேடி சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதுபற்றி அவர், “எனது பல பயணங்களுக்குப் பிறகு, நான் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன் என்று நினைத்தேன்.ஆனால், கிரகத்தில் எங்கும் காணப்படாத அசுத்தமான கழிவறை எங்கு உள்ளது என்று தோன்றியதால், அதை கண்டுபிடிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டேன் எனவும், நீண்ட தேடுதலுக்கு பிறகு, உலகின் மிக மோசமான கழிவறையை தஜிகிஸ்தானில் கண்டுபிடித்ததாகவும் கூறியுள்ளார்.
இதற்காக அவர் கிட்டத்தட்ட ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் செலவழித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சுற்றுலா பயணம் பற்றிய தகவல்களை அவர் தனது புதிய புத்தகமான ‘டாய்லெட்ஸ் ஆஃப் தி வைல்ட் ஃபிரான்டியரில்’ அவர் சந்தித்த 36 மோசமான கழிவறைகளைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் பார்த்த அந்த மோசமான கழிவறைக்கு நரகத்தின் துளை என்றும் பெயர் வைத்துள்ளார்.