பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் அமன் செராவத்திற்கு வடக்கு ரயில்வேயில் சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
உலகளவில் பிரபலமான ஒலிம்பிக் தொடர் இம்முறை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று கடத்த 11 ஆம் தேதி முடிந்தது .
உலக புகழ்பெற்ற இத்தொடரில் மொத்தம் 10500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டனர் . இதில் இந்தியா சார்பில் 100க்கும் பெற்ற போட்டியாளர்கள் கலந்துகொண்டனர் .
Also Read : கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!
இதில் மல்யுத்த போட்டியில் பதக்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வினீஷ் போகாட் எடை அதிகரிப்பு காரணமாக இறுதிப்போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆடவருக்கான் மல்யுத்த பிரிவில் சிறப்பாக விளையாடிய இந்திய மல்யுத்த வீரர் அமன் செராவத் வெண்கலம் வென்று அசத்தினார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த அமன் செராவத் ரயில்வேயில் பணியாற்றி வரும் நிலையில் தற்போது அவருக்கு வடக்கு ரயில்வேயில் சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.